குடவாசல், ஜூலை 22- திருவாரூர் மாவட்டம் நீடாமங்க லம் ஒன்றியத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலா ளர் டி.ஜான் கென்னடியை கொலை வெறியுடன் தாக்கிய சமூகவிரோத கும்பலை கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பாக நீடாமங்கலம்- தஞ்சாவூர் சாலை யில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் நீடாமங்கலம் ஒன்றிய செய லாளர் டி.ஜான் கென்னடி ஒளிமதி கிரா மத்தில் வசிக்கிறார். இவர் ஒளிமதி யில் நடைபெறும் மணல் கடத்தல் உள்ளிட்ட, சமூக விரோத செயலை தொடர்ச்சியாக தட்டிக் கேட்டும், தடுத் தும் வந்துள்ளார். இதனால் ஆத்திரம டைந்த தமிழார்வன் மற்றும் அவர் மகன் ஸ்டாலின் பாரதி அவர்களு டைய கும்பல் ஜான் கென்னடி மீது திங்கள் இரவு ஆயுதங்களை கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தி படுகாயத்துடன் விட்டுச் சென் றுள்ளனர். இந்த தாக்குதலில் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்களான சுந்தரமூர்த்தி, மூர்த்தி, சித்ரா ஆகி யோரும் காயமடைந்தனர். சமூக விரோதிகளின் கொலை வெறி தாக்குதலை கண்டித்தும், ஏற்க னவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட,தற்போது வெளியில் உள்ள சமூக விரோதி ஒளிமதி தமி ழார்வன் மற்றும் அவர் மகன் ஸ்டா லின் பாரதி அவர்களுடன் தாக்குத லில் ஈடுபட்ட கும்பலை சார்ந்தவர் களை உடனடியாக கைது செய்ய கோரியும் மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலையில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். ஒன்றியச் செயலாளர் சோம.ராஜமாணிக்கம் தலைமையில் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி,மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் வி.எஸ்.கலியபெருமாள், எம். சேகர், பி.கந்தசாமி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் கே.கைலாசம், வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.பி.ஜோதிபாசு, தலை வர் எஸ்.எம்.சலாவுதின் மற்றும் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள், வாலிபர் சங்கத்தின் பொறு ப்பாளர்கள் கண்டன ஆர்ப்பாட் டத்தில் கலந்து கொண்டு சமூக விரோதியை உடனே கைது செய்ய வேண்டும் என முழக்கமிட்டனர். சிபிஎம் தலைவர்கள் ஆறுதல் டி.ஜான்கென்னடி, சுந்தர மூர்த்தி, மூர்த்தி, சித்ரா ஆகியோர் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்களை, மன்னார்குடி மருத்துவமனைக்கு நேரில் சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மற்றும் நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் சோம.ராஜமாணிக்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், வாலி பர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.