தூத்துக்குடி, ஜூலை 22- கம்யூனிச தலைவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் சமூக விரோதிகளை கைது செய்து சட்ட ரீதியாக தண்டிக்க வலியுறுத்தி இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட அலுவலகம் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் அழகு முத்து பாண்டியன் தலைமை வகித்தார். திராவி டர் கழகம் பெரியார் அடி யான், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.ரசல், சிபிஎம் மாநகரச் செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் சங்கரன், வாலி பர் சங்க மாவட்ட செயலாளர் எம்எஸ்.முத்து, மாவட்ட குழு உறுப்பினர் குமார வேல், சிபிஐ சார்பில் சுப்பிர மணியன், மணி, ஆசாரி, சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.