மீஞ்சூரில் தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி சனிக்கிழமையன்று (ஆக.1) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மீஞ்சூர் பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் டி.மதன், பொன்னேரி பகுதிச்செயலாளர் சதீஷ் உள்ளிட்டோர் பேசினர்.