சிபிஐ மாநிலக்குழு அலுவலகம் மற்றும் சிபிஐ முதுபெரும் தலைவர் கே.நல்லகண்ணு பற்றி, வலைத் தளங்கள் வாயிலாக அவதூறுச் செய்தி பரப்பிய சமூக விரோதிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி சிக்கல் கடைத்தெருவில் சிபிஎம் நாகை ஒன்றியச் செயலாளர் பி.டி.பகு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து கண்டன உரையாற்றினார்.