சென்னை, ஜன. 24- சமூக விரோத கும்பல்களை அடையாளம் கண்டு ஆரம்ப நிலையிலேயே குற்ற நிகழ்வுகளை தடுக்கக்கோரி வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிர மராஜா தமிழக முதல்வர், மாநில காவல் துறை இயக்குநர் சி.சைலேந்திர பாபு, மாநில கூடுதல் காவல்துறை இயக்குனர் தாமரை க்கண்ணன், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் ஆகியோரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் சமூக விரோதச் செயல்கள், ரவுடிகளின் தாக்குதல்கள் மீண்டும் தலைதூக்கும் அவலம் ஆங்காங்கே அரங்கேற்றப்பட்டு வருகிறது. இது வணி கர்கள், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை யும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த நான்கைந்து மாதங்களாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வணிகர்களுக்கு எதிரான ரவுடிகளின் வன்முறைகள் நிகழ்ந்து வருகிறது. கடந்த 20ஆம் தேதி மதுராந்தகம் அருகே மாமண்டூரில் தர்மா ராம் நகை அடகு கடை வியாபாரியை பட்டபகலில் ரவுடி ஒருவர் வெட்டியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கெல்லாம் மூல காரணத்தை ஆராய்ந்தால், குற்ற நிகழ்வுகளை முறையாக பதிவு செய்து, சமூக விரோதிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்காமல், காலதா மதம் செய்வதாலும், தண்டனை பெற்றுத் தராததுமே குற்றவாளிகள் மேலும் மேலும் குற்றங்களை செய்வதற்கு துணிவையும், தூண்டுதலையும் அளிக்கிறது. எனவே அரசும், காவல்துறையும் ஆரம்ப நிலையி லேயே குற்ற நிகழ்வை தடுத்து நிறுத்தி, சமூக விரோத கும்பல்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.