திருவண்ணாமலை, ஏப்.24- கொரோனா பாதிப்பு நிவாரண தொகையாக தனது சேமிப்பான 1860 ரூபாய்யை 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் வழங்கி னான். திருவண்ணாமலை அடுத்த பவித்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியம்மாள். இவரது மகன் ராஜேஷ், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறான். தனது உண்டியலில் சேர்ந்து வைத்துள்ள 1860 ரூபாய் சோமிப்பை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி யிடம் வழங்கினார். அந்த மாணவனை பாராட்டி கைகுலுக்கிய ஆட்சியர் அந்த மாணவனுக்கு சான்றிதழ் வழங்கினார். இதேபோல், கொரால் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்ற விவசாயி கொரோனா பாதிப்பில் உள்ள பொது மக்களுக்கு உதவும் வகையில் 60 மூட்டை அரிசியை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார். இதைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் விவசாயியை பாராட்டினார்.