திரூவள்ளூர்,மார்ச்.26- கொத்தடிமைகளாக இருந்த 43 வெளி மாநிலத்தவர்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே பாரிவாக்கத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலைக்கு அழைத்து வரப்பட்டு சம்பளம் தரப்படாமல் கொத்தடிமைகளாக இருந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த வெளிமாநிலத்தவர்கள் 43 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மின்னஞ்சல் மூலம் வந்த புகாரின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.