சென்னை,மார்ச்.28- இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நடைபெறவிருப்பதால் மக்கள் அதனைக் காண மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்
2025ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. ஆனால் இதனை இந்தியாவில் காண முடியாது மேலும் சூரிய கிரகணமானது வட அமெரிக்கா, ஆப்ரிக்கா, ரஷ்யா, ஐஸ்லாந்து, க்ரீன்லாந்து ஆகிய நாடுகளில் தென்படும். இன்று 93% சூரியன் மறைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் வெளிநாடுகளிலிருந்து மக்கள் பார்ப்பதற்காக இணையத்தில் நேரலை ஒளிபரப்புகளும் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.