tamilnadu

img

சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்து சத்துணவு- அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக, மாநிலம் தழுவிய அளவில், மாவட்ட தலைநகரில் கோரிக்கை ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  மாவட்டத் தலைவர் பி. புவனேஸ்வரி தலைமை வகித்தார். பி.ராஜசுலோச்சனா, எஸ்.டி.லட்சுமி, டி. உஷாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ். செங்குட்டுவன் துவக்கவுரையாற்றினார்.  அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஆர். சந்திரா, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். புஷ்பநாதன், மாவட்டத் தலைவர் பி.சண்முகம், செயலாளர் வி.முனியன், பொருளாளர் மணிமேகலை ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார்கள்.  மாநிலச் செயலாளர் குரு. சந்திரசேகரன் கோரிக்கைகளை அமல்படுத்தக் கோரி பேசினார். ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊராட்சி செயலர் ஆகியோருக்கு மாதம் ரூ.7850- ஓய்வூதியத்தை 110 விதியின் கீழ் அறிவிக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கும் மாத இறுதி நாளில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ஜிபிஎப், எஸ்பிஎப் போன்றவைகளை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட முதல்வரின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட வேண்டி பெருமுழக்கம் செய்யப்பட்டது.  திருச்சிராப்பள்ளி  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் எலிசபெத் ராணி தலைமை வகித்தார். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் செந்தமிழ் செல்வன் துவக்க உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர்கள் சாமிநாதன், அல்போன்சா, மாநிலச் செயலாளர் பெரியசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் மாவட்ட பொருளாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் பேசினர்.  தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் ராஜேந்திரன் நிறைவுறையாற்றினார். முன்னதாக மாவட்ட இணைச் செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். முடிவில் மாவட்டப் பொருளாளர் ஜெயராஜ் நன்றி கூறினார்.