அரசு கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கிய கருத்தரங்கம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத்துறை சார்பாக ஆங்கில இலக்கிய கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ம. துரை தலைமை ஏற்று உரையாற்றினார். ஆங்கிலத்துறை தலைவர் ஏ. கணேசன் தொடக்க உரையாற்றினார். பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் டி. டெஸ்டோணிஸ் ஆங்கிலம், மொழியியல், இலக்கியம் அதன் சார்ந்த தொடர்புகள் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். ஆங்கிலத் துறை மாணவிகள் இலக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் ஆங்கில மொழியின் பயன்பாடு குறித்துப் பேசினர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, மூன்றாம் ஆண்டு ஆங்கிலத் துறை மாணவி எஸ். பிரதீபா வரவேற்றுப் பேசினார். ஆங்கிலத்துறை இரண்டாம் ஆண்டு முதுகலை மாணவி கே. அகல்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆங்கிலத்துறை மூன்றாம் ஆண்டு மாணவி கே. அகல்யா நன்றி கூறினார்.