நீலகிரி/ கொடைக்கானல்,மார்ச்.31- கூட்ட நெரிசலைத் தடுக்க சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களுக்கு உயர்நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள் நாளை அமலாகிறது.
நீலகிரி, கொடைக்கானலில் ஏற்கனவே இ-பாஸ் முறை அமலில் உள்ள நிலையில் தற்போது கூட்ட நெரிசலைத் தடுக்க சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள் நாளை(ஏப்ரல் 01.) முதல் அதாவது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.கூட்ட நெரிசலைத் தடுக்க நீலகிரியில் வார நாட்களில் 6,000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8,000 வாகனங்களும், கொடைக்கானலில் வார நாட்களில் 4,000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6,000 வாகனங்களும் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.