tamilnadu

காட்டெருமை தாக்கி தொழிலாளி பலி

தேனி, மே 20- போடி அருகே, வனப்பாதையில் நடந்து சென்ற தோட்டத் தொழிலாளி ஒரு வர் காட்டெருமை தாக்கி இறந்து போனார். மற்றொருவர் தவறி விழுந்து காயமடைந்தார்.  போடி அருகே கேரள எல்லையில் உள்ள தமிழக மலைக் கிராமம் கொழுக்கு மலை. இங்குள்ள தேயிலை எஸ்டேட்டில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்ப வர்கள் சங்கரன்கோவில் அருகே குறிஞ் சாம்பட்டியை சேர்ந்த லட்சுமணபாண்டி (46) மற்றும் போடி அருகே கோடாங்கி பட்டியை சேர்ந்த சேகர் (52). இருவரும் கொழுக்குமலை கிராமத்திலிருந்து அத்தி யாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக போடி அருகே உள்ள குரங்கணி மலைக் கிராமத்திற்கு வந்துள்ளனர்.

2 வருடம் முன்பு வனத் தீயில் சிக்கி 23 பேர் பலியானதால் தடை செய்யப்பட்ட ஒத்தை மரம் வனப்பாதை வழியே வந்து விட்டு மீண்டும் திரும்பிச் செல்லும் போது ஒத்தை மரம் அருகே நின்றிருந்த காட்டெ ருமை இருவரையும் விரட்டியது. இதில் காட்டெருமை முட்டி தாக்கிய தில் லட்சுமணபாண்டி பலத்த காயம டைந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.  பயந்து ஓடிய சேகர் மலைப்பாதை யில் தவறி விழுந்து காயமடைந்தார். காயத்துடன் மீண்டும் குரங்கணிக்கு வந்து சேகர் கொடுத்த தகவலின் பேரில் பொது மக்கள், காவல் துறையினர் லட்சுமண பாண்டியின் சடலத்தை டோலி கட்டி மீட்டனர். சேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.