tamilnadu

நூறு நாள் வேலை கேட்டு தேனியில்  32 ஊராட்சிகளில் வி.தொ.ச ஆர்ப்பாட்டம்

தேனி, மே 14- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்க வேண்டும், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.7.500 வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தேனி மாவட்டத்தில் 32 ஊராட்சி களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கம்பம் ஒன்றியம் நாரயணத்தேவன் பட்டியில் விதொச மாவட்ட செயலா ளர் ஏவி.அண்ணாமலை தலைமையி லும், ஆண்டிப்பட்டி ஒன்றியம் ரெங்க சமுத்திரத்தில் மாவட்டத்தலைவர் கே.தயாளன் தலைமையிலும், பாளை யம் ஒன்றியம், எம்.சிந்தலைசேரியில் மாவட்ட உதவி தலைவர் சுருளிவேல் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. போடி ஒன்றியம் சிலமலை ஊராட்சியில் எஸ்.கே.பாண்டியன், தங்க பாண்டி ஆகியோர் தலைமையிலும், பெரி யகுளம் ஒன்றியம் ஜி.கல்லுப்பட்டியில் தாலுகா தலைவர் இளங்கோவன் தலை மையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தேனி மாவட்டத்தில் 32 ஊராட்சிகளில் நடைபெற்ற போராட்டங்களில் ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வேலை கேட்டு மனுக்கள் அளித்தனர்.