tamilnadu

img

பால் உற்பத்தியாளர் போராட்டம் கண்டுகொள்வாரா கே.டி.ராஜேந்திரபாலாஜி?

கடமலைக்குண்டு, ஜூன் 15- தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் கண்ட மனூர், கடமலைக்குண்டு, மயி லாடும்பாறை வருஷநாடு சிங்க ராஜபுரம், முருக்கோடை தும்மக் குண்டு பாலூத்து, உள்ளிட்ட கிரா மங்களில் நூற்றுக்கணக்கான  விவசாயிகள் பால்மாடுகள் வள ர்த்து வருகின்றனர். பால் கூட்டு றவு சங்கங்கள் மூலம் கொள் முதல் செய்யப்பட்டு தேனி ஆவி னுக்கு அனுப்பப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களாக கொரோனா ஊரடங்கு காலத்தில்  தேனி ஆவின் நிர்வாகம் பால் கொள் முதல் விலையை 31 ரூபாயிலி ருந்து 27 ரூபாயாக குறைத்து விட்டதாகக் கூறுகிறது. தனியார் நிறுவனங்களிடமிருந்து குறைந்த விலைக்கு பாலை வாங்கி கிராம மக்கள் வழங்கும் பாலை திருப்பி அனுப்புகின்றனராம். இதனால் பால் வீணாகிறது.  இதையடுத்து தமிழக முதல் வர், துணைமுதல்வர், பால் வளத்துறை அமைச்சர் ஆகி யோரின் கவனத்திற்கு தங்களது கோரிக்கையை கொண்டு செல் லும் வகையில் பாலை கீழே கொட்டி அழிக்கும் போராட்டத் தில் ஈடுபட்டனர். இப்போராட்டத் தில் வருஷநாடு முருக்கோடை, உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பால்பண்ணை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.