tamilnadu

தேனி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா பெண் காவலர், ஓட்டுநர் உட்பட 61 பேருக்கு உறுதி

தேனி, ஜூன் 28- தேனி மாவட்டத்தில் பெண் காவலர், காவல்துறை வாகன  ஓட்டுநர் உட்பட 61 பேருக்கு ஞாயி றன்று  கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது. தேனி ஆனந்தம் ஜவுளிக் கடை யில் பணிபுரிந்த ஆண்டிபட்டி ஜக் கம்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்த 27 வயது வாலிபர், அதே பகுதி சுப்பு காலானியை சேர்ந்த 8 வயது, 4 வயது குழந்தைகள், முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 50 வயது நபர், மதுரை வேலம்மாள் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ள ஆண்டிபட்டி சித்தையன் கவுண்டன்பட்டியை சேர்ந்த 60 வயது நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கம்பம் தெற்கு காவல்நிலை யத்தில் ஆய்வாளருக்கு வாகன ஓட்டுநராக பணிபுரிந்த சின்ன மனூரை சேர்ந்த காவலருக்கும், சில நாட்களுக்கு முன் கம்பத்தில் இறப்பு நிகழ்விற்கு சென்று வந்த, சின்னமனூர் சாமிகுளத்தை சேர்ந்த 52 வயது பெண்ணிற்கும் கொரோனா உறுதி செய்யப்பட் டுள்ளது. போடியில் சிறப்பு சார்பு ஆய் வாளர் ஒருவரின் மூலம் தொற்று பரவி உத்தமபாளையம் இந்திரா நகரை சேர்ந்த அவரது 58 வயது சகோதரிக்கும்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனி அருகே கொடுவிலார் பட்டியை சேர்ந்த 48 வயது  பூ வியாபாரி, வெங்கடாசலபுரத்தை சேர்ந்த 48 வயது  கார் ஓட்டுநர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.பெரிய குளம் பகுதிகளில்  சோதனை சாவடி பணியில் இருந்த தேனி ஆயுதப் படை  31 வயது பெண் காவலர், கோடாங்கிபட்டியை சேர்ந்த 30 வயது  தனியார் கார் ஓட்டுநர் தேனி சமதர்ம புரத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி ,37 வயது வாலிபருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது . பெரியகுளம் தென்கரையில் 8 வயது பெண் குழந்தை உட்பட 6 பெண்களுக்கும், 4 ஆண்களுக் கும் கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது. ஞாயிறன்று நிலவரப்படி 61 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு மொத்த எண் ணிக்கை 599 ஆக உயர்ந்துள்ளது.