தேனி, ஜூன் 6- அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று கைதான தகவலை மறைத்து பணியில் சேர்ந்த கம்பத்தைச்சேர்ந்த பெண்ணின் காவலர் பணி ஆணையை, தமிழக காவல்துறை தலைவர் ரத்து செய்து உத்தர விட்டார். நாராயணத்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் மனைவி பிரேமா (28). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், பிரேமா சில மாதங்களுக்கு முன்பு காவலர் தேர்வாணையம் மூலம் காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். தேனி மாவட்ட காவ லர் பயிற்சி நிலையத்தில் 15 நாள்கள் வரை பயிற்சி பெற்றற பிரேமா, தற்போது திருச்சி மாவட்ட காவலர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வந்தார்.
இந்த நிலையில், பிரேமா அரசுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று கைதானதாக காவல் துறை நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தேனி மாவட்ட காவல் துறை நடத்திய விசாரணை யில், அரசு மதுபானக் கடைகளுக்கு எதிரா கவும், கேரள முதல்வர் மற்றும் அமைச்ச ரின் தேனி மாவட்ட வருகையைக் கண்டித்தும் நடைபெற்ற போராட்டங்களில் மக்கள் அதி காரம் என்ற அமைப்பின் சார்பில் பங்கேற்று கைதானவர் என்பதும், இந்த வழக்குகளில் தனது பெயரை கலைமணி என்று கூறி காவல் நிலையங்களில் பதிவு செய்தி ருந்ததும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட காவல் துறை நிர்வாகம், தமிழக காவல் துறை நிர்வாகத்திற்கு அறிக்கை அளித்துள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில், அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று கைதான தகவலைத் தெரி விக்காமல் மறைத்து பணியில் சேர்ந்ததற்கா கவும், காவல் காவல் நிலைய வழக்குகளில் தனது பெயரை மறைத்து போலியான பெயரை பதிவு செய்ததற்காகவும் பிரே மாவின் பணி ஆணையை, தமிழக காவல்துறை நிர்வாகம் வியாழக்கிழமை ரத்து செய்தது.