tamilnadu

img

வாய்க்கால்கள் தூர்வாரும் பணி: திருப்பனந்தாள் விவசாயிகள் கோரிக்கை

கும்பகோணம், ஜூன் 1-  தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் பகுதி ஆறு வாய்க்கால்களை முறைகேடு இன்றி தூர்வார வலியுறுத்தி திருப்பனந்தாள் பொ துப்பணித்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் டிஜி. ராஜேந்திரன் தலை மையில் மனு அளிக்கப்பட்டது. நிகழ்வில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் அரவிந்த் சாமி, முத்துக்குமார், சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது, திருப்ப னந்தாள் பகுதியில் முறைகேடு இன்றி ஆறு வாய்க்கால்களை தூர் வார விவசாயிகளை கொண்ட கண்காணிப்புக் குழு உருவாக்க வேண்டும். அனைத்து ஆறு வாய்க்கால்களை தூர்வாரும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.