தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஊராட்சி ஒன்றியம் 17 ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அனுசியா ராஜா, அம்மையகரம், வரகூர், பிரமன்பேட்டை, கழுமங்கலம், அடஞ்சூர் ஆகிய இடங்களில் வாக்குகள் சேகரித்தார். சிபிஎம் திருவையாறு ஒன்றியச் செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ராம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே.மதியழகன், ஆர்.பிரதீப் ராஜ்குமார், டி.ராமலிங்கம், கிளைச் செயலாளர் ஜெ.ராவணன், எம்.சௌந்தர்ராஜன், ஏ.ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
***************
திருச்சி திருவெறும்பூர் 17ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் யமுனாதேவி போட்டியிடுகிறார். இவர் பொன்மலை பகுதி செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அமுல் நகர், தென்றல் நகர், பேன்சி நகர் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பகுதி குழு உறுப்பினர் சீனிவாசன், ராஜிவ் காந்திநகர் கிளைச் செயலாளர் ஏ.பாலமுருகன், பொன்னேரிபுரம் எஸ்.சக்திவேல் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.