அபாயம் உள்ளது. சிபிஐ, ஐ.பி., நீதிமன்றங்கள், நீதிபதிகள் அரசின் கைப்பாவையாக மாறும் நிலை வேதனையளிக்கிறது. மகாத்மா காந்தி தேசப் பிதா என்பதிலிருந்து மாறி, மோடி தேசப்பிதா என்னும் நிலையை உருவாக்கி வருகின்றனர். அம்பானி, அதானி போன்றவர்களுக்கு வேண்டுமானால் மோடி பிதாவாக இருக்கலாம். மானமுள்ள மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 8.19 சதம் வேலையில்லாதோர் தற்போது அதிகரித்துள்ளனர். அவுட்சோர்சிங் காரணமாக வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. வேலையில்லா இளைஞர்களைத் திரட்டுவது, அவர்களுக்காக பாடுபடுவது என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முயற்சிமேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, அகில இந்திய மாநிலஅரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ஏ.ஸ்ரீகுமார், சமூக வலைத்தளத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ச.மயில், ஜாக்டோ-ஜியோ மாநிலஒருங்கிணைப்பாளர் கு.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மதியம் பிரதிநிதித்துவப் பேரவைஅமர்வில், குழுக்கள் தேர்வு நடைபெற்றது. மாநிலத் தலைவர்(பொ) ஆ.செல்வம் தலைமை வகித்தார். வேலைமற்றும் ஸ்தாபன அறிக்கையை பொதுச்செயலாளர் மு.அன்பரசு, வரவு- செலவுஅறிக்கையை மாநிலப் பொருளாளர் எம்.தங்கராஜ் ஆகியோர் தாக்கல் செய்து பேசினர்.
மாநாட்டு தீர்மானங்கள்
அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் மு.சுப்பிரமணியன் பணி ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்ததை ரத்துசெய்ய வேண்டும்; ஜாக்டோ- ஜியோ போராட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், வழக்குகள், தொலைதூர மாறுதல்களை ஆகியவற்றை ரத்து செய்து பதவி உயர்வுகள்மற்றும் பணி ஓய்வு வழங்கிட வேண்டும்;புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; 21 மாத கால ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்; சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் சிறப்பு கால முறைஊதியத்தை ரத்து செய்து விட்டு, காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும்;தொகுப்பூதியம் பெற்று வரும், கணினிஉதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள்ஆகியோருக்கு காலமுறை ஊதியத்தைநிர்ணயம் செய்ய வேண்டும். லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்; அரசுத்துறை தனியார்மயமாக்கலை தடுத்து நிறுத்த வேண்டும்; சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக் காலமாக வரன் முறை செய்யவும், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல்கேஸ் உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக நூல் வெளியீடு மற்றும் முன்னாள் மாநில நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.