தஞ்சாவூர், மே 28- தொழில் நுட்பம் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு, சகோதர கழகங்களைப் போல, இரண்டு நாள் சுழல் முறை பணி வழங்க வேண்டும். 18 ஆம் தேதி முதல் பணிக்கு வர இயலாதவர்களுக்கும், பணிக்கு வந்து இடை இடையே வர முடியாதவர்களுக்கும் சிறப்பு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்டவை வலி யுறுத்தி அனைத்து விரைவுப் போக்குவரத்துக் கழக அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில், தஞ்சையில் போக்குவரத்துக் கழக அனைத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு தொமுச பணிமனை தலைவர் டி.எட்வின் பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசுப் போக்கு வரத்துக் கழக சிஐடியு தலைவர் பி.முருகன் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் என்.குருசாமி, தொமுச பணிமனைச் செயலாளர் ராஜேந்திரன், சிஐடியு மத்திய சங்க துணைத் தலைவர் பி.வெங்டேசன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஞானசேகரன், அரசுப் போக்குவரத்து சிஐடியு துணைத் தலைவர் வி.திருநாவுக்கரசு, துணைச் செயலாளர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.