tamilnadu

img

சாலை பராமரிப்பு பணியை ஒரே கம்பெனிக்கு வழங்குவதை ரத்து செய்க! நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஆக.11- சாலைப் பணியாளர்களை கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்திடும் விதமாக தரமான முக க்கவசம், கையுறை உள்ளிட்ட பாது காப்பு உபகரணங்கள் வழங்கிட வே ண்டும், சாலை பராமரிப்பு பணியை ஒரே  கம்பெனிக்கு வழங்கப்பட்டுள்ள மற்றும்  வழங்க உத்தேசித்துள்ள ஒப்பந்தங்க ளை ரத்து செய்ய வேண்டும், சாலைப்  பணியாளர்களின் 41 மாத பணி நீக்க  காலத்தை பணிக்காலமாக முறைப்ப டுத்தி ஆணை வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களுக்கு நிரந்தர பய ணப்படி, சீருடை மற்றும் சலவைப்படி வழங்கப்பட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணி யாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் தஞ்சாவூர்  மாவட்டம் சார்பாக 20 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே திங்கள்கிழமை கொள்கை முழக்க போராட்டம், முறை யீடு இயக்கம் நடைபெற்றது. கோட்டத் தலைவர் சந்திரசேனன் தலைமை வகித்தார்.
திருவாரூர்
திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தில் கோட்டத்தலைவர் பி.சுப்ரமணியன் தலைமை வகித்தார்.