tamilnadu

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

 தஞ்சாவூர், அக்.22- தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் 12 ஆவது பட்ட மளிப்பு விழா செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் தலைமை வகித்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்ரமணியன் வரவேற்று பேசுகை‌யி‌ல், “தமிழ் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாதம் தோறும் இரண்டாயிரம் ரூபாய் உதவித் தொகையை அரசு வழங்கி வருகிறது.  முதுகலைத் தமிழ், வரலாறு ஆகிய பாடங்களில் ஒருங்கி ணைந்த முதுகலை ஐந்தாண்டு பட்டப் படிப்புகளும் நாட கத்துறையில் நிகழ்த்து கலையில் முதுகலைப் படிப்பும் இவ்வாண்டில் தொடங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழ கத்தின் பதிப்புத்துறை தமிழ்மொழி, இலக்கண, இலக்கியம், அகராதிகள், களஞ்சியங்கள் உள்ளிட்ட பல்பொருள் குறித்த 508 சிறந்த நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டுச் சாதனை படைத்துள்ளது.  மத்திய அரசின் தேசிய உயர் கல்வி ஆணைய( RUSA) நல்கை ரூ.20 கோடி பல்கலைக்கழகத்திற்குக் கிடைத் துள்ளது. உலகளாவிய அளவில் தமிழ்மொழி மற்றும் பண்பாட்டைப் பாதுகாத்துப் பரவலாக்கம் நோக்கத்தில் அரசின் சிறப்புப் திட்டங்களாகத் தமிழ் வளர் மையம் மற்றும் தமிழ்ப் பண்பாட்டு மையம் நிறுவப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார். சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ச.ப.தியாக ராசன் தம் உரையில், மொழியாய்வு, அறிவியல் ஆய்வு, மருத்துவ ஆய்வு போன்ற ஆய்வுத் திட்டங்களை உரு வாக்கலாம். நமது சங்க இலக்கியங்களிலும் பின்வந்த இலக்கியங்களிலும் கூறப்பட்டிருக்கும் கருத்துச் செல்வங்களை பல துறைகள் இணைந்து வெளிநாட்ட வரும் ஒப்புக் கொள்ளக் கூடிய ஆய்வு வழிமுறைகளைப் பின்பற்றி ஆய்வுத் திட்டங்களாகச் செயல்படுத்தலாம்.  இதன் மூலமாக, நாட்டிற்குப் பயன்படும் நதிநீர் ஆய்வு, மருத்துவ ஆய்வு, உள்ளிருக்கை புனர் ஆய்வு, வான்- விண்கலை வளர்ப்பு ஆய்வு, நாட்டின் பாதுகாப்புத் துறை வளர் ஆய்வு போன்றவற்றினை முன்னிலைப்படுத்தி, உள்நாட்டு வெளிநாட்டு நிதி ஆதாரங்களைப் பெற்றுச் செயல்படுத்தலாம். இதுபோன்ற திட்டங்களை உரு வாக்கும் போது, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துறைகள் ஒருங்கிணைந்து, நாட்டிலுள்ள சிறப்புப் பல்கலைக்கழ கங்களுடன் கைகோர்த்துச் செயல்பட்டால், UGC/MHRD/ICSSR/AYUSH/DST போன்ற நிதி நல்கும் துறை கள் நிதியுதவி கொடுக்கும் வாய்ப்பு பெரிய அளவில் உள்ளது” என்றார்.  அரசின் தமிழ் ஆட்சிமொழி, பண்பாடு மற்றும் தொல்லி யல் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தரு மான க.பாண்டியராசன் சிறப்புரை ஆற்றினார். மொரிசீயஸ் நாட்டு அமைச்சரும், உலகத் திருக்குறள் மைய நிறுவனரு மான ஆறுமுகம் பரசுராமன், தமிழ்நாட்டின் மூத்த நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளரும், எழுத்தாளருமான அறி ஞர் ஆ.சிவசுப்பிரமணியன், எழுத்தாளர் கல்யாண்ஜி (வண்ணதாசன்) எனும் சி.கல்யாணசுந்தரம் ஆகியோ ருக்கு மதிப்புறு முனைவர்(D.Litt) பட்டம் வழங்கப்பட்டது. அரசின் தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றம் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், பதி வாளர்(பொ) முனைவர் கு.சின்னப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.