சென்னை, நவ. 17 - சென்னையில் உள்ள சவீதா இன்ஸ்டிட்டியூட் ஆஃப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்சஸ் நிறு வனத்தின் 19-ஆவது பட்ட மளிப்பு விழா அக்கல்லூரி வளாகத்தில் உள்ள எம். எம். கன்வென்ஷன் சென்ட ரில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ஜப்பான் தூதரகத்தின் துணைத் தூதர் டாகா மசாயூகி மாண வர்களிடையே வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய சவீதா பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் என். எம். வீரையன், தம்முடைய கல்வி வளாகத்தில் உள்ள பெருமைமிகு உள்கட்ட மைப்பு வசதிகளைப் பட்டிய லிட்டார். கடந்த ஓராண்டில் இக்கல்வி நிறுவனம், ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையில் நிகழ்த்திய பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளதாக கூறினார். பட்டமளிப்பு விழாவில் மருத்துவம், பல் மருத்து வம், செவிலியர், பிசியோ தெரபி, சட்டம், நிர்வாகம், அலைடு ஹெல்த் யின்சஸ், பிசிக்கல் எஜூ கேஷன் ஆகிய துறை களைச் சேர்ந்த 684 மாண வர்களுக்கு இவ்விழாவில் பட்டங்கள் வழங்கப்பட்டது.