districts

img

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

செங்கல்பட்டு, செப் 26- எஸ்ஆர்எம் பல்கலைக்  கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 7119 மாணவ மாணவிகள் பல்வேறு துறைகளில் பட்டம் பெற்றனர். செங்கல்பட்டு மாவட்டம்,  காட்டாங்கொளத்தூரில் செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்  கழகத்தில் 18-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலொசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் கலந்து கொண்டு பட்ட மளிப்பு உரையை ஆற்றி னார்.  மற்றும்  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர்  ஸ்ரீஎஸ்.சோமநாத்  கலந்து கொண்டார். சிறப்பு அழைப்பாளர்கள் இரு வருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் விழாவில் வழங்கப்பட்டது.  மேலும்  கல்லூரியில் படித்த 7119 மாணவ மாணவி யர்களுக்கு பி.டெக் பொறி யியல் பட்டமும், 107 மாணவர்களுக்கு முனை வர் பட்டமும், 93-பேருக்கு கட்டிடக்கலை பட்டமும், 61-பேருக்கு வடிவமைப்பு பட்டமும் என மொத்தம் 7380 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலொசகர் பேராசிரியர் அஜய் குமார் கருத்துரை யாற்றினார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தரும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர்,  இணை துணை வேந்தர் சத்யநாராயணன், துணை வேந்தர் முத்தமிழ் செல்வன், பதிவாளர் பொன்னுசாமி உள்ளிட்டோரும் பேராசிரி யர்கள் கலந்து கொண்டனர்.