tamilnadu

img

தமிழ்ப் பல்கலைக் கழக விவகாரம் நீதிபதி தலைமையில் குழு அமைத்து பணியாளர் தகுதியை ஆய்வு செய்க!

தஞ்சாவூர், டிச.28- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழ கத்தில் முறைகேடாக பணியில் சேர்ந்த வர்கள் தொடர்பான சர்ச்சை நீடித்து வருவதால், உயர்நீதிமன்ற நீதிபதி தலை மையில் கல்வியாளர்களைக் கொண்ட குழு அமைத்து புதிதாக பணியில் சேர்ந்த வர்களின் கல்வி நிலைப் பணியாளர் களின் கல்வித்தகுதி, அனுபவச்சான் றின் உண்மை நிலையை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக ஆளுநருக்கு பல்கலைக்கழக ஆசிரியர் - பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஆசிரியர்- பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் கடந்த 24- ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சனிக் கிழமை அன்று, சட்ட ஆலோசகர் எம்.நெடுஞ்செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணி யனின் நியமனத்தை ரத்து செய்து நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பின் நகல் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் பல்கலைக்கழகத்தின் அன்றாட செயல்பாடுகளை முடக்கி வைக்கும் வகையில் துணைவேந்தரை பணி செய்ய விடாமலும், துணைவேந்தரை பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழை யக் கூடாது என அச்சுறுத்துவதையும், பல்கலைக்கழக பணியாளர்களையும் மிரட்டும் வகையில் ஒரு சில சங்கத்தி னர் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கி றோம். பணி நியமனங்களில் நடைபெற் றுள்ள முறைகேடுகளைக் காவல் துறை விசாரணை செய்து வரும் நிலையில், தகுதியில்லாத நபர்கள் பல்கலைக் கழ கத்தில் தொடர்ந்து பணியாற்றி வரு கின்றனர்.  இதனால் மாணவர்களின் நலனும் பல்கலைக்கழக மாண்பும் உயர்கல்வித் தரமும் ஆராய்ச்சி தொடர்பான செயல் பாடுகளும் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், தமிழகத்தின் ஆளுநரும், பல்கலைக் கழகங்களின் வேந்தரும் உடனடியாக உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் பல்கலைக்கழக மானிய குழு, கல்வியாளர்களைக் கொண்ட ஆய்வுக்குழுவினை அமைத்து புதிதாக நியமனம் செய்யப்பட்ட கல்வி நிலைப் பணியாளர்களின் கல்வித் தகுதி, அனு பவச்சான்று ஆகியவற்றை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து இப்பல்கலைக்கழகத்தை காப்பாற்ற வேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நோக் கம் சிதறி வருவதால், தற்காலிக பணியா ளர்கள் நியமனம் செய்வதை முற்றிலும் கைவிட வேண்டும். இதனால் தான் லஞ்சமும், முறைகேடுகளும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதே போல் பல்க லைக்கழகத்துக்கு பதிவாளர் பதவிக்கு ஐஏஎஸ் அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும்” என்றார். பல்கலைக்கழக எஸ்சி, எஸ்டி ஆசிரி யர் பணியாளர் மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் ச.ரவிவர்மன், எஸ்சி, எஸ்டி கல்வி மற்றும் கல்விசாரா பணியாளர் நலச்சங்கத் தலைவர் ஆர்.ஆனந்த அரசு ஆகியோர் உடனிருந்தனர்.