tamilnadu

தமிழ் ஓதுவார்கள்  80 பேர் நியமனம்  

 

தஞ்சாவூர், பிப்.2- தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு முன்னேற்பாட்டுப் பணி களை அரசு தலைமைச் செயலாளர் மு. சண்முகம் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விழாவையொட்டி பொது மக்களுக்கு என்ன தேவையோ அதை செயல்படுத்திட அதிகாரிகளுக்கு அறி வுறுத்தினோம். மேலும் பொதுமக்க ளுக்கு உதவிடும் வகையில் நம்ம தஞ்சை என்ற ஒரு செயலி உருவாக்கப்பட்டுள் ளது. அச்செயலியின் மூலம் குடமுழுக்கு விழா தொடர்பாக தெரிந்து கொள்ளலாம். இந்து சமைய அறநிலையத்துறை மூலம் தமிழ் ஓதுவார்கள் 80 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் திருமுறைப் பாடல்கள், தேவாரம், திருவாசகம், திரு விசைப்பா ஆகிய பாடல்கள் பாடு வார்கள்” என்றார்.