தஞ்சாவூர், அக்.14- மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ (எம்.எல்) லிபரே ஷன் ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் அக்.13, 14 ஆகிய தேதிகளில், தஞ்சை மாவட்டம் முழுவதும் 100 மையங்களில் பிரச்சாரம் மற்றும் தெருமுனை கூட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு, அதன் படி ஞாயிற்றுக்கிழமை பிரச்சார இயக்கம் தொடங்கி நடைபெற்றது. திங்கள் கிழமை யும் தொடர்ந்து நடக்கிறது. அக்.16 புதன் கிழமை காலை 10 மணிக்கு தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதனொரு பகுதியாக பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றிய இடது சாரிகள் கூட்டமைப்பு சார்பில் பேராவூரணி, ஒட்டங்காடு, பெருமகளூர், ரெட்டவயல், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெரு முனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. பேராவூரணியில் பெரியார் சிலை அருகே நடைபெற்ற கூட்டத்தில் விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் (சிபிஐ) பா.பாலசுந்தரம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டத்தலைவர் ஆர்.வாசு(சிபிஎம்) ஆகியோர் சிறப்புரை யாற்றினர். சிபிஐ ஒன்றிய செயலாளர் பன் னீர்செல்வம், நகரச் செயலாளர் சித்திர வேலு, நிர்வாகிகள் கருணாமூர்த்தி, ராச மாணிக்கம், ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜாமுக மது, நகரக் குழு உறுப்பினர் எஸ்.ஜகுபர் அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சேதுபாவாசத்திரம்
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெரு மகளூர் கடைவீதியில் நடைபெற்ற கூட்டத் தில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் வி.கருப்பையா, ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, தம்பிக்கோட்டை எஸ்.சுப்பிரமணியன், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் பி.காசிநாதன், ஒன்றி யச் செயலாளர் சின்னத்தம்பி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஒரத்தநாடு
ஒரத்தநாடு ஒன்றியத்தில் ஒரத்தநாடு நகரம், பாப்பாநாடு, ஆம்பலாபட்டு, தொண்டராம்பட்டு, கண்ணுகுடி, வடசேரி, ஒக்கநாடு கீழையூர், நெய்வாசல், சடை யார்கோயில், மேல உளூர், செல்லம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடதுசாரி கள் கூட்டமைப்பு சார்பில் பிரச்சாரப் பய ணம் மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் நடந்தது. சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என். சுரேஷ்குமார், சிபிஐ ஒன்றியச் செயலாளர் சீனி. முருகையன், மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
மதுக்கூர்
மதுக்கூர் ஒன்றியத்தில், மதுக்கூர் நகரம், பேருந்து நிலையம், முக்கூட்டுச் சாலை, ஆலத்தூர், கீழக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் வை. சிதம்பரம், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். காசி நாதன், சிபிஐ ஒன்றியச் செயலாளர் பாரதி மோகன், மாவட்ட துணைச் செயலாளர் கல்யாணசுந்தரம், டாக்டர் மு.செல்லப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எஸ்.கந்தசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஏ.எம்.மார்க்ஸ் ஆகியோர் தலைமையில், உதயசூரியபுரம், நம்பிவயல், ஆலடிக்கு முளை, நாட்டுச்சாலை, தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, மணிக்கூண்டு, காந்தி சிலை, தலைமை தபால் நிலையம், கரிக்காடு, ஏனாதி, வெண்டாக்கோட்டை, முதல் சேரி கரம்ப யம், துவரங்குறிச்சி ஆகிய இடங்களில் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். தமிழ்செல்வி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.சிவ குரு, எம்.செல்வம், சிபிஐ மாநிலக் குழு உறுப்பினர் சி.பக்கிரிசாமி, நகரச் செயலா ளர் எம்.எம்.சுதாகர் மற்றும் இரு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவையாறு
திருவையாறு ஒன்றியத்தில் கண்ட மங்கலம், வரகூர், செந்தலை, கருப்பூர், வளப்பக்குடி உள்ளிட்ட இடங்களில் நடை பெற்ற பிரச்சாரக் கூட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் பி.செந்தில்குமார், மாவட்டக்குழு எம். பழனி அய்யா, எம்.ராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தரங்கம்பாடி
நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பிரச் சார இயக்கம் திங்களன்று நடைபெற்றது. இயக்கத்திற்கு கட்சியின் வட்ட செயலா ளர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் சிம்சன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உரையாற்றி னர். திருக்கடையூர், ஆக்கூர், தலைச்சங் காடு, தரங்கம்பாடி, பொறையார், காட்டுச் சேரி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட கிராமங்க ளில் பிரச்சாரம் நடைபெற்றது.