tamilnadu

img

அனைத்து சமய நிறுவன இடங்களில் குடியிருப்போருக்கு குடிமனைப் பட்டா வழங்குக! சிபிஎம் சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம்

தஞ்சாவூர், நவ.26- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசு புறம் போக்கு, கோயில் மடம், வக்ப் போர்ட், கிறிஸ்தவ நிறுவ னங்கள் மற்றும் அறக்கட்டளை நிலங்களில் குடியிருப் போருக்கு குடிமனைப் பட்டாவும், குடிமனை இல்லாதோ ருக்கு இலவச மனைப் பட்டாவும், சாலையோரம், நீர், நிலை புறம்போக்குகளில் குடியிருப்போருக்கு மாற்று இடம் வழங்க கோரி செவ்வாய்க்கிழமை அன்று தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு பெருந் திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற பெருந்திரள் முறையீடு போராட்டத்திற்கு சிபிஎம் தஞ்சை ஒன்றியச் செயலாளர் எம்.மாலதி, மாநக ரச் செயலாளர் என்.குருசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டக் குழு உறுப்பினர் கே. அபிமன்னன் முன்னிலை வகித்தார்.  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வெ.ஜீவகுமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சரவணன், ஜி.அரவிந்தசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மாநக ரக் குழு உறுப்பினர்கள் உள்பட 300 பேர் கலந்து கொண்டனர்.  500 க்கும் மேற்பட்டோரின் கோரிக்கை மனுக்க ளைப் பெற்றுக் கொண்ட தஞ்சை வட்டாட்சியர் வெங்கடே சன், ‘பாரதி நகர், ராமநாதபுரம், ஆலக்குடி, வல்லம்புதூர், மேட்டுத்தெரு ஆகிய இடங்களில் முன்னுரிமை அடிப்ப டையில், விரைந்து பரிசீலித்து ஒரு மாத காலத்திற் குள் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக” தெரிவித்தார்.
ஒரத்தநாடு 
ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பான போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் ஒரத்தநாடு என். சுரேஷ் குமார், திருவோணம் பி. கோவிந்தராசு ஆகி யோர் தலைமை வகித்தனர். மாவட்டக் குழு உறுப்பி னர் எஸ்.கோவிந்தராசு முன்னிலை வகித்தார். ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் மற்றும் வாலிபர் சங்கத்தினர், பொ துமக்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பூதலூர் 
 பூதலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் என்.வி. கண்ணன் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.காந்தி, தெற்கு ஒன்றியச் செய லாளர் சி.பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்பட 600 பேர் கலந்து கொண்டனர். அரசு அறிவித்துள்ளபடி விரைவில் தயாராக உள்ள 180 மனைப் பட்டா வழங்கப்படும் என வட்டாட்சியர் சிவக்குமார் தெரிவித்தார்.
பட்டுக்கோட்டை 
பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.செல்வம், என்.சிவகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ஆர்.மனோகரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.  மாவட்டக்குழு உறுப்பினர்கள் திருவோணம் கே.ராமசாமி, மதுக்கூர் ஆர். காசிநாதன், மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் வை.சிதம்பரம், ஒன்றியக்குழு உறுப்பினர் கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 380 மனுக்கள் வட்டாட்சியரிடம் வழங்கப்பட்டது.
பேராவூரணி 
 பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பையா தலைமை வகித்தார். ஒன்றியச் செய லாளர்கள் சேதுபாவாசத்திரம் ஆர்.எஸ்.வேலுச்சாமி, பேராவூரணி ஏ.வி.குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.வாசு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். மனைப்பட்டா கேட்டு 373 கோரிக்கை மனுக்கள் வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி யிடம் நேரில் வழங்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் விதிமுறைகளுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
திருவையாறு 
திருவையாறு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பி
னர்கள் எம்.பழனி அய்யா, எம்.ராம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
திருவிடைமருதூர்
திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் ஜி. பக்கிரிசாமி திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் சாமிக்கண்ணு ஆகியோர் தலைமை வகித்த னர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. ஜெயபால் திரு விடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சா.ஜீவ பாரதி ஆகியோர் விளக்க உரை ஆற்றினர். திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய குழு உறுப்பி னர்கள் திருப்பனந்தாள் ஒன்றியக்குழு உறுப்பினர் கள் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்க ளை வட்டாட்சியரிடம் வழங்கினர்.     கும்பகோணம்
 கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு குடந்தை ஒன்றிய செய லாளர் பி ஜேசுதாஸ் தலைமையேற்றார். குடந்தை நகர செயலாளர் செந்தில்குமார், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சின்னை. பாண்டி யன், கா.அருளரசன், மாவட்ட குழு உறுப்பினர் சி .நாக ராஜன், எம்.கண்ணன் ஆகியோர் விளக்கி பேசினர். மாதர் சங்க பொறுப்பாளர் கலா, ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி மாநில குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன் தலைமை வகித்தார். நகர செய லாளர் கே.ஜி. ரகுராமன், ஒன்றிய செயலாளர்கள் டி.வி. காரல்மார்க்ஸ், வி.டி. கதிரேசன், கே. பாலசுப்பிரமணி யன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி. ஜோதிபாசு, கே.என். முருகானந்தம், தமிழ்மணி, மாவட்ட குழு உறுப்பினர்கள் டி. சுப்பிரமணி யன், எஸ். சாமிநாதன் கே.வி. ராஜேந்திரன் 5000 க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 3000 மனுக்கள் வட்டாட்சியரிடம் கொடுக்கப்பட்டது.
சீர்காழி 
நாகை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் வட்ட செய லாளர் சி.வி.ஆர்.ஜீவானந்தம் தலைமை தாங்கினார். போராட்டத்தை விளக்கி கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.மாரியப்பன், வட்டக்குழு உறுப்பினர்கள் விளக்க உரையாற்றினர். இதில் 338 மனுக்கள் வழங்கப் பட்டன. 350க்கும் மேற்பட்ட கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்
தரங்கம்பாடி
தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஸ்டாலின் தலைமை வகித்தார். முன்ன தாக பொறையார் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் கள் டி.சிம்சன், டி.இராசையன், ஏ.ரவிச்சந்திரன் மற்றும்  டி.கோவிந்தசாமி, காபிரியேல் உரையாற்றினர். பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று தரங் கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை முழக் கங்களை எழுப்பியவாறு மனுக்களை அளித்தனர்.
பொன்னமராவதி
புதுக்கோட்டை பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கட்சியின் பொன்னமராவதி ஒன்றிய செயலாளர் என்.பக்ருதீன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பொன்னுச்சாமி சிறப்புரையாற்றினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர் கள் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு கொடுத்தனர்.
பாபநாசம் 
பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு பாபநாசம் ஒன்றிய செயலாளர் பிஎம். காதர் உசேன் தலைமை வகித்தார். அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் நம்பிராஜன் முன்னிலை வகித்தார். கோரிக்கையை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர் புண்ணியமூர்த்தி, கே முனியாண்டி, பி.விஜயாள் ஆகி யோர் விளக்க உரையாற்றினார்.  பாபநாசம், அம்மாபேட்டை ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் மற்றும் 300 பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி 
கட்சியின் மாநகர் மாவட்டக்குழு சார்பில் திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் நடை பெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாநிலக்குழு உறுப்பி னர் ஸ்ரீதர் பேசினார். போராட்டத்தில் 500 க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கை மனுவை ஆட்சியர் சிவராசுவிடம் வழங்கினர்.
மண்ணச்சநல்லூர்
மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியக்குழு சார்பில் உத்தமர்கோவில் ஜெ.சி. அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் கே.வி.எஸ்.இந்துராஜ், சுப்ரமணியன், சிவராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரெங்கநாதன், சம்பத், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட 150 க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியிடம் 150 மனுக்கள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் புதுக்கோட்டை நகரச் செயலாளர் சி.அடைக்கலசாமி, ஒன்றியச் செயலா ளர் டி.லட்சாதிபதி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், சி.அன்பு மணவாளன் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ஜியாவுதீன், துரை.நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அறந்தாங்கி
அறந்தாங்கியில் ஒன்றியச் செயலாளர் தென்றல் கருப்பையா தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன் கோரிக்கை விளக்கவுரையாற்றி னார். மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கறம்பக்குடியில் வடக்கு ஒன்றியச் செயலாளர் த.அன்பழகன், தெற்கு ஒன்றி யச் செயலாளர் எம்.பாலசுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.உடையப்பன் பேசினார்.