tamilnadu

img

மருத்துவமனைக்கு பொருட்கள் வழங்கிய நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா

தஞ்சாவூர், நவ.5- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த செருவாவிடுதி தரம் மேம் படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவமனைக்கு தேவை யான பொருட்களை வழங்கிய நன்கொடையா ளர்களுக்கு பாராட்டு விழா செங்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் வி.சௌந்தர்ராஜன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மருத்துவ மனைக்கு குளிர் சாதனப் பெட்டி, பீரோ, மரச் சாமான் கள், குடிநீர் சுத்திகரிப்பு கருவி, நாட்டுக்கோழிகள் மற்றும் பல்வேறு உப யோகப் பொருட்களை வழங் கிய, பேராவூரணி முன்னாள் பேரூராட்சித் தலைவர் என்.அசோக்குமார், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மல்லிகை வை.முத்துராமலிங்கம், சீயோன் பள்ளி தாளாளர் தளபதி, ஒப்பந்ததாரர் டி. பன்னீர்செல்வம், சோழன் சூப்பர் மார்க்கெட் மன்சூர் அலி, களத்தூர் முருகானந் தம், களத்தூர் பி.சிவா, ஆசி ரியர் கபிலன் ஆகியோருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.  தொடர்ந்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ மனை வளாகத்தில் இயற்கை முறையில் விளை விக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் சோளக்கதிர்கள் 25 க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக வழங்கப் பட்டது. டாக்டர்கள் பொன்.அறிவானந்தம், ரஞ்சித், அம்சவாணி மற்றும் அப்துல் மஜீத், சோழன் ஜபருல் லாஹ், பேராவூரணி வர்த்தக கழக பொருளாளர் எஸ்.ஜகு பர்அலி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திர சேகரன், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் கண் ணன், சுகாதார ஆய்வாளர் கள் ராம்குமார், தவமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.