tamilnadu

img

கொரோனா பேரிடர் கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்குக! தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜூலை 8- கொரோனா பேரிடர் காலத்தில், அனைத்து வகை மாற்றுத் திறனாளிக ளின் வாழ்வாதார நிதியாக மாதம் ரூபாய் 5  ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளி ட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம்  முன்பு ந.த.இளங்கோவன் தலைமையி லும், தஞ்சை ஒன்றியம் ஆலக்குடி விஏஓ அலுவலகம் அருகே மாவட்ட துணைச் செய லாளர் கிருஷ்டி, ஒன்றியத் தலைவர் சேகர் ஆகியோர் தலைமையிலும், திருக்கா னூர்பட்டியில் தமிழ்செல்வி தலைமையி லும் குருங்குளத்தில் ராதிகா தலை மையிலும், பூதலூர் தெற்கு வெண்டை யம்பட்டியில் கிளைச் செயலாளர் லெட்சு மணன் தலைமையிலும், பவனமங்க லத்தில் சம்பத் தலைமையிலும், கட ம்பங்குடியில் செந்தில்குமார் தலைமை யிலும், இந்தலூர், சோழகம்பட்டி ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அம்மாபேட்டை ஒன்றியம் ராரா முத்திரைக்கோட்டை பூண்டி, புலவர்நத்தம் உள்ளிட்ட 11இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவோணம் ஒன்றியம் கிளாமங்கலத்தில் கிளைச் செயலாளர் திங்கள்கண்ணன் தலைமையிலும் நடந்தன. இதேபோல் பேராவூரணி, பட்டு க்கோட்டை, ஒரத்தநாடு, திருவோணம், சேதுபாவாசத்திரம், திருவையாறு, பூத லூர் தெற்கு, பூதலூர் வடக்கு உள்ளிட்ட பல்வேறு ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்களிடம் கோரி க்கை மனு அளிக்கப்பட்டது.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் 26 இடங்க ளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலகத்தின் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 110 பெண்கள், 200 ஆண்கள் உட்பட 310 பேர் கலந்து கொண்டனர்.                           புதுக்கோட்டை
புதுக்கோட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு மாவட்டப் பொருளாளர் ஜி.கிரிஜா தலைமை யிலும், அன்னவாசலில் மாவட்டச் செயலாளர் கே. சண்முகம் தலைமையிலும் நடைபெற்றது.
பெரம்பலூர் 
. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம்  அருகே நகராட்சி அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் ப.பழனிசாமி தலைமை யிலும், ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் கிரா மத்தில் மாவட்ட துணைத் தலைவர் ஜெய வேல் தலைமையிலும், செட்டிகுளம் கிரா மத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் கந்த சாமி தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம் வெள்ளுவாடி கிராமத்தில் கிளை தலைவர் சிவபதி தலைமையிலும், குன்னம் வட்டம் பேரளி கிராமத்திலும் நடைபெற்றது
கரூர்
அரவக்குறிச்சி ஒன்றியக் குழு சார்பில் பள்ளபட்டி வருவாய் ஆய்வாளர் அலு வலகம் முன்பு மாவட்ட குழு உறுப்பினர் கே. வீராச்சாமி தலைமை வகித்தார்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம், சிக்கல், மாப்ப டுகை, சோழம்பேட்டை, சித்தர்காடு, மலி யம், மறையூர், மணல்மேடு, கிழாய், அகர ங்குடி, வில்லியநல்லூர், ஆத்துக்குடி, கழு க்காணிமுட்டம், கீழமாரத்தூர், சேமங்க லம், வரதம்பட்டு, பொரவச்சேரி, ஆழியூர், கீழ்வேளூர், கீழையூர், தலைஞாயிறு, வேதாரணியம் ஆகிய ஒன்றியங்களின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பின்னர் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. வேதாரணியம் ஒன்றியம், தாணி க்கோட்டகம் கிராம நிர்வாக அலுவலர் அலு வலகம் முன்பு ஒன்றியத் தலைவர் சண்மு கம் தலைமை வகித்தார். இதுபோல், ஆய க்காரன்புலம், செட்டிப்புலம், நாகக்கு டையான், புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, கரியாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெற்றது. தரங்கம்பாடி, மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பா ட்டங்கள் நடைபெற்றன. வரதப்பட்டில் மாவ ட்டச் செயலாளர் டி.கணேசன் தலைமை யிலும், வதிஸ்டாச்சேரியில் சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் வட்ட செயலாளர் பஷீர் அகமது தலைமையிலும் நடை பெற்றது.