districts

img

நூறு நாள் வேலை வழங்க வேண்டும் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜூலை 13 - தேசிய வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நூறு நாட்கள் வேலை வழங்க வேண்டும். 40 விழுக்காடு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.3000, கடுமையாகப் பாதிக்கப் பட்டவர்களுக்கு ரூ.5000 உதவித் தொகை வழங்க வேண்டும். தகுதி உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு பணித்தளப் பொறுப்பாளராக பணி வழங்க வேண்டும். விண்ணப்பித்த அனைவருக்கும் உதவித்தொகையும், வீடு இல்லாத வர்களுக்கு இலவச வீடும், வீட்டு மனைப் பட்டாவும் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் மானியம் வழங்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி புதன்கிழமை புதுக் கோட்டை மாவட்டம் அன்னவாசலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத் தின் ஒன்றியத் தலைவர் எம்.சி.லோக நாதன் தலைமை வகித்தார். ஒன்றியச்  செயலாளர் எஸ்.லெட்சுமணன், பொரு ளாளர் ஏ.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கை களை விளக்கி சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சண்முகம் சிறப்புரை யாற்றினார். போராட்டத்தை ஆதரித்து தோழமைச் சங்க நிர்வாகிகள் பேசி னர்.