tamilnadu

தஞ்சாவூரில் 14 இடங்களில் வாக்கு எண்ணும் மையம்

தஞ்சாவூர் டிச.26- தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள், ஜனவரி 2-ஆம் தேதி 14 இடங்களில் எண்ணப்பட உள்ள தாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள் ளார். இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யுள்ளதாவது: தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 349 வாக்குச்சாவடி களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி யிலும், திருவையாறு ஊராட்சி ஒன்றி யத்தில் 168 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகள் திருவை யாறு சீனிவாசராவ் மேல்நிலைப் பள்ளியிலும், பூதலூர் ஊராட்சி ஒன்றி யத்தில் 167 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகள் திருக்காட்டுப் ்பள்ளி சர் சிவசாமி அய்யர் மேல் நிலைப் பள்ளியிலும், எண்ணப்பட உள்ளது.  இதே போல் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்தில் 260 வாக்குச்சாவடி களில் பதிவாகும் வாக்குகள் ஒரத்தநாடு பெண்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், திருவோணம் ஊராட்சி ஒன்றியத்தில் 142 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகள் ஊரணிபுரம் வெட்டுவாக் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியும், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் 277 வாக்குச்சாவடிக ளில் பதிவாகும் வாக்குகள் கும்ப கோணம் அரசு மகளிர் கலைக் கல்லூரியிலும் எண்ணப்பட உள்ளது. திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றி யத்தில் 222 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகள் திருவிடை மருதூர் திருவாவடுதுறை ஆதீனம் மேல்நிலைப்பள்ளியிலும், திருப்ப னந்தாள் ஊராட்சி ஒன்றியத்தில் 176 வாக்குச்சாவடி மையங்களில் பதிவாகும் வாக்குகள் திருப்ப னந்தாள் குமரகுருபரர் மெட்ரிகு லேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் 180 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகள் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் எண்ணப்பட உள்ளது. அம்மாபேட்டை ஊராட்சி  ஒன்றியத்தில் 188 வாக்குச்சாவ டிகளில் பதிவாகும் வாக்குகள் பூண்டி புஷ்பம் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றி யத்தில் 189 வாக்குச்சாவடிகளில் பதி வாகும் வாக்குகள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி யிலும், மதுக்கூர் ஊராட்சி ஒன்றி யத்தில் 128 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகள் மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி யிலும், பேராவூரணி ஊராட்சி ஒன்றி யத்தில் 159 வாக்குச்சாவடிகளில் பதி வாகும் வாக்குகள் பெரியநாயகபுரம் டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரியிலும், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 163 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி யிலும் எண்ணப்படவுள்ளது.