tamilnadu

img

வாக்கு எண்ணும் மையத்துக்கு பலத்த பாதுகாப்பு

வேலூர்,ஆக.6- வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆக.5 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டுவரப்பட்டு அறைகளில் வைத்துப் பூட்டி சீல்வைக்கப்பட்டன. நடைபெற்று முடிந்த இந்தத் தேர்தலில் காலை மந்தமாக இருந்த வாக்குப்பதிவு மதியத்திற்கு பின் விறுவிறுப்படைந்தது. 6 மணிக்கு முன்னதாக வந்த வாக்காளர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. 72 விழுக்காடு வாக்குகள் பதிவானது. இந்த வாக்குகள் வரும் 9ஆம் தேதி வாலாஜாபேட்டையிலுள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது.  இதற்காக வாக்குச்சாவடிகளிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கல்லூரியில் கொண்டுவந்து வைக்கும் பணி விடிய விடிய நடைபெற்றது. மொத்தம் ஆயிரத்து 553 வாக்குச்சாவடி களிலிருந்து 3 ஆயிரத்து 732 வாக்கு எந்திரங்கள் மற்றும் 2 ஆயிரத்து 99 விவிபேட் எந்திரங்கள் வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்டன. பின்னர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் 6 அறைகளில் வைத்து சீலிடப் பட்டன. அங்கு துணை ராணுவப் படையினரும் காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.