தஞ்சாவூர் ஆக.10- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த சேதுபாவாசத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப் படை அமைப்பு சார்பில் மரக்கன்று நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியர் ஆறுமுகநயினார் தலைமை வகித்தார். தேசிய பசுமைப் படை திட்ட அலுவலர் கருணாகரன் வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, மரக்கன்று நட்டு வைத்து சிறப்புரையாற்றினார். கூட்டுறவு வங்கி தலைவர் நாடியம் சிவ.மதிவாணன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் அம்மணிசத்திரம் பாலு, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சமயமுத்து, தேவேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் அய்யாத்துரை, எம்.ஆர்.மாரிமுத்து, செல்வக்கிளி, ராஜமாணிக்கம், சரபோஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.