தஞ்சாவூர், ஜூன் 6-தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே ஆதனூர் இ.பாலா பண்ணைத் தோட்டத்தில் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது. உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி ‘தாய் மண்’ தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில்நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் கௌரவத் தலைவர் பேராசிரியர் வேத.கரம்சந்த் காந்தி தலைமை வகித்தார்.ஆப்பிள் வெலிங்டன் வரவேற்றார். காவல்துறை அலுவலர் எஸ்.எசேக்கியா, இ.பாலா, ஜெயபாலன் ஆகியோர்முன்னிலை வகித்தனர். நகர வர்த்தக கழக பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி, செய்தியாளர்கள் ஜி.ராஜா, பழ.பழனியப்பன் கலந்து கொண்டனர். கிராம செயலாளர் பிரெடரிக், கபிலன், அப்துல் ரகுமான்,அய்யர் மருதையன், டோமினிக், சம்மந்தம் கலந்து கொண்டனர். குமுளி தேக்கு, மகோகனி, செம்மரம், ரோஸ்வுட், வேங்கை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டன.