தஞ்சாவூர், செப்.7- தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் நடத்தினர். பேராவூரணி அருகிலுள்ள முடச்சிக்காடு தெற்கு பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மழை யின்றி ஏற்பட்ட வறட்சியால் 30 ஆயி ரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் ஆழ்குழாய் கிணறு ஒன்றும், மினி டேங்க் ஒன்றும் தண்ணீர் இன்றி வறண்டு போய் செயல் இழந்து விட்டது. இதனால் அதே பகுதியில் அமைந்திருந்த மற்றொரு மினி டேங்க் மூலம் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீர் பிடித்து உப யோகித்து வந்தனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அதில் இயங்கி வந்த 1 ஹெச் பி மோட்டார் பழுத டைந்ததாலும், அதிகமான குடும்பங்கள் பயன்படுத்தி வந்ததா லும் மும்முனை மின்சாரத்தில் இயங் கக் கூடிய மோட்டார் பொருத்தப் பட்டது. ஆனால் முறையான விண்ணப் பம் கொடுத்தும், அதற்குரிய தொகை யினை பெற்றுக் கொண்டும் மின் இணைப்பு கொடுக்க மின்சார வாரி யம் அலட்சியம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆறுமாத காலமாக தென்னந்தோப்புகளில் ஓடும் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீரை எடுத்து பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இதனால் ஆந்திரமடைந்த பொதுமக்கள் சனிக்கிழமை காலை முடச்சிக்காடு- பேராவூரணி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகரன், சேதுபாவா சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலக கணக்கர் பிரகாஷ், ஊராட்சி எழுத்தர் கணேசன் ஆகியோர் பேச்சு வார்தையில் ஈடுபட்டனர். இதில், “வரும் திங்கள் அன்று மின்சார வாரியத்தில் இணைப்பு கொடுப்ப தாக உறுதியளித்தனர். இதை யடுத்து மறியல் கைவிடப்பட்டது.