tamilnadu

குடிநீர் வழங்கக் கோரி மக்கள் சாலை மறியல்

அரியலூர், மார்ச் 21- ஜெயங்கொண்டம் நக ராட்சி செங்குந்தபுரம் கிரா மத்தில் ஆழ்குழாய் கிணற் றில் இருந்து நேரடியாக வீடு களுக்கு குடிநீர் விநியோ கிக்கப்பட்டு வந்தது. தற் போது குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவ தால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் நகராட்சியிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் குடிநீர் குழாயில் கேட்வால்வு பழு தானதால் குடிநீர் கிடைக்கா மல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக் காததால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் செங்குந்த புரம் பேருந்து ஸ்டாப் பகுதி யில் சாலை மறியலில் ஈடு பட்டனர். இவர்களிடம் ஜெயங்கொண்டம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கையை மனு வாக தருமாறு கேட்டனர். பின்னர் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டதால் மக்கள் கலைந்து சென்றனர்.