தஞ்சாவூர், மே 31- போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு அறிவித்தபடி கொரோனா காலத்திற்கு முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும். ஏற்கனவே மே மாதத்தில் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு, சொந்த விடுமுறையை கழித்ததாக வரும் தகவல்களால் ஊழி யர்கள் அச்ச நிலையில் உள்ளனர். ஊழி யர்கள் அச்சத்தை நிர்வாகம் போக்க வேண்டும். பணிக்கு வரும் ஊழியர்களுக்கு அனைத்து பாதுகாப்பு உபகரணங்களை யும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில், தஞ்சாவூர் விரைவுப் போக்கு வரத்துக் கழக பணிமனை முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு தொமுச நிர்வாகி எட்வின் பாபு தலைமை வகித்தார். சிஐ டியு நிர்வாகிகள் செங்குட்டுவன், வெங்க டேசன், தொமுச நிர்வாகிகள் ராஜேந்திரன், ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அரசு போக்குவரத்துக் கழக நகர் கிளையில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஏஐடியுசி கௌரவத் தலைவர் துரை.மதி வாணன், தொமுச துணைச் செயலாளர் ஜெயச்சந்திரன், ஐஎன்டியுசி சரவணன், சிஐடியு மத்திய சங்க துணைச் செயலாளர் ராமசாமி ஆகியோர் தலைமை வகித்த னர். சிஐடியு கௌரவத் தலைவர் ஆர்.மனோ கரன் நிறைவுரையாற்றினார். 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கிளை மேலாளர் ரவிக்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அரசு போக்குவரத்துக் கழக புறநகர் பணிமனையில் நடைபெற்ற, போராட்டத் துக்கு சிஐடியு மத்திய சங்க தலைவர் முரு கன் தலைமை வகித்தார். சிஐடியு கௌர வத் தலைவர் ஆர்.மனோகரன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மத்திய சங்க இணைச் செயலாளர் டி.காரல்மார்க்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரியலூர் போக்குவரத்து தொழிலாளர் சங்க கூட்டமைப்பு சார்பாக அரியலூர் கிளை போக்குவரத்து அலுவலகம் முன்பு போரா ட்டம் சிஐடியு மத்திய சங்க துணை பொதுச் செயலாளர் எம்.சந்தானம் தலைமையில் நடைபெற்றது. அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்க பொறுப்பாளர்கள் எம். கனகராஜ், எம்.ராமதாஸ், கே.கொளஞ்சி நாதன், கிருஷ்ணன், கே.ராஜா உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.