tamilnadu

img

‘6 மாதச் சம்பளத்தை தாருங்கள்’ பிஎஸ்என்எல் ஊழியர்கள் கோரிக்கை

 கும்பகோணம், ஆக.13- பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு துறையில் பணிபுரி யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. தொடர்ந்து பல்வேறு வகை யான போராட்டம் நடத்தியும் நிர்வாகம் எந்தவித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. நிலுவையில் உள்ள தொழிலாளர்களின் ஊதியத்தை உடனே வழங்க கோரி திருச்சியில் உள்ள தொழி லாளர் அமலாக்கத் துறை அலுவலரிடம் திருச்சி, தஞ்சை, குடந்தை மாவட்டத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.  பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் பாபு, ராதாகிருஷ்ணன், திருச்சி மாவட்ட பிஎஸ்என்எல் ஊழியர் சங்க செயலாளர் இஸ்லாம் பாட்ஷா, குடந்தை மாவட்ட தலை வர் ராமசந்திரன், ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் தலை வர் பாலாஜி, மாவட்ட செயலாளர் நித்தியானந்தம் தஞ்சை  மாவட்ட செயலாளர் சம்பத் மற்றும் மாநில சங்க நிர்வாகிகள், திருச்சி தொழிலாளர் துறை அமலாக்க அலுவலர் சந்தித்து நேரில் கோரிக்கை மனுவை அளித்தனர்.