tamilnadu

டெல்டா பாசனத்திற்கு ஜூன் 16-ல் கல்லணை நீர் திறப்பு

தஞ்சாவூர், ஜூன் 13- தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 1689 குளங்களை ரூ 16 கோடியே 89 லட்சம் மதிப்பில் தூர்வாருவதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பயனீட்டாளர்கள் குழு மூலம் தூர்வாரும் பணி செயல்படுத்தப்படுகிறது.  அக்டோபர் 2019 வரை 1083 குளங்கள் முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளது. மீத முள்ள 606 குளங்களை தூர்வாரும் பணி  மே 2020-ல் ஆரம்பிக்கப்பட்டு, இது வரை 64 குளங்கள்முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளது. ஜூன் 30-க்குள் மீத முள்ள குளங்களை தூர்வாரிடும் வகையில் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், பாசன வசதி மற்றும் கால்நடைகள் பயன்பாட்டிற்கு உதவியாக அமையும். மேலும், மாவட்டத்தில் தேசிய  ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தினந்தோறும் சராசரியாக 90,000 பணியா ளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தூர்வா ரும் பணிகளை செய்து முடிப்பதன் மூலம்  இவ்வருடம் தங்கு தடையின்றிகடைமடை வரை விவசாயத்திற்கு பாசன வசதி கிடைக்க பெறும். மேட்டூர் அணையில் கடந்த  12 ஆம் தேதி திறக்கப்பட்டதண்ணீர், வரும் 15 ஆம் தேதி இரவு கல்லணை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 16 அன்று, கல்லணையில்தண்ணீர் திறக்கப்படும் என தஞ்சாவூர் ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்தார்.