tamilnadu

img

பேராவூரணி அருகே 2 ஐம்பொன் சிலைகள் மீட்பு: 3 பேர் கைது

தஞ்சாவூர், ஆக.3 –  பேராவூரணி அருகே ஐம்பொன் சிலைகளை திருட  முயன்ற 3 பேரை காவ‌ல்துறை ‌யின‌ர் கைது, அவர்களிடம் இருந்து சிலைகளை மீட்ட னர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள புக்கரம்பை கிராமத்தில், சிலர் ஐம்பொன் சிலை களை விற்பனை செய்யப் போவதாக காவல்துறைக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்த ரவின் பேரில், பட்டுக்கோ ட்டை காவல் உதவி ஆய்வா ளர் தென்னரசு தலைமை யிலான தனிப்படையினர், ஞாயிற்றுக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.  இச்சோதனையில் கோ வில் சிலைகளை திருடி விற்க முயன்ற புக்க ரம்பை கிராமத்தை சேர்ந்த  சரவணன்(37), பிரான்மலை (36), கரூர் மாவட்டம் குளித்த லையை சேர்ந்த ஆண்டி ச்சாமி என்ற ராஜா (36) ஆகிய  மூன்று பேரையும் பிடித்து அவர்களிடமிருந்த இரண்டு சிலைகளை மீட்டு கைது  செய்து சிறையில் அடைத்த னர். கைப்பற்றப்பட்ட 2 ஐம்பொன் சிலைகளில், முக்கால் அடி உயரமும் இர ண்டரை கிலோ எடையிலான அனுமன் சிலை, ஒரு அடி உயரமும் நான்கு கிலோ எடையிலான ஸ்ரீநாராயணி அம்மன் சிலையும் இரு ந்தன. “கைப்பற்றப்பட்ட சிலைகளின் மதிப்பு மற்றும் அது எத்தனை ஆண்டுகள் பழமையானது என்ற விப ரங்கள் தொல்லியல் துறை  ஆய்வுக்குப் பிறகே தெரிய வரும்” என காவல்து றையினர் தெரிவித்தனர். இது குறித்து சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் அண்ணாதுரை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.