தஞ்சாவூர் டிச.15- தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்க ளில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய லோக் அதாலத் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு, உரிமை யியல் வழக்கு உள்ளிட்டவை மற்றும் நிலுவை வழக்கு கள் தொடர்பாக கூடுதல் மாவட்ட நீதிபதிகள் தலைமை யில் 4 அமர்வுகள் அமைக்கப்பட்டது. இந்த மக்கள் நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட நீதிபதி (கூடுதல் முழுப் பொறுப்பு) மற்றும் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதியுமான கே. கருணாநிதி தொடங்கி வைத் தார். சிறப்பு மாவட்ட நீதிபதி மற்றும் நிரந்தர மக்கள் நீதி மன்றத் தலைவருமான ஆர்.தங்கவேல், போக்சோ நீதிமன்ற நீதிபதி எம். எழிலரசி, கூடுதல் சிறப்பு நீதிபதி அண்ணா மலை, முதன்மை சார்பு நீதிபதி என்.எஸ்.ஸ்ரீவத்சன், கூடுதல் சார்பு நீதிபதி சரவணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி ஏ. அனிதா கிருஸ்டி, குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் ஏ.முக மது அலி, நளினகுமார், நீதித்துறை நடுவர் (விரைவு நீதி மன்றம்) பி.அல்லி ஆகியோர் 12 அமர்வுகளாக இருந்து விசா ரணை செய்தனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் இருந்த வழக்குகளில் 1,158 வழக்குகள் விசா ரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 1,010 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டது. இவற்றில் 127 விபத்து இழப்பீட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டு, ரூ 6.11 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. இதுதவிர வங்கிகளில் வாராக் கடன் தொகை தொடர்பாக 273 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அனைத்து வழக்குகளுக்கும் 1.01 கோடிக்கு தீர்வு காணப் பட்டது. இந்த மக்கள் நீதிமன்றத்துக்கான பணிகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பி.சுதா ஒருங்கிணைத்து செய்திருந்தார்.