tamilnadu

img

பாபநாசம் ஒன்றியத்தில் திமுக எம்பி நன்றி அறிவிப்பு

கும்பகோணம், செப்.5- மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் மக்களை சந்தித்து ராஜகிரி பண்டாரவாடை சக்கர சக்கராப்பள்ளி பசுபதிகோயில் நன்றி தெரிவித்தார். அப்போது பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை எம்பியிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட எம்பி செ.ராமலிங்கம், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவேன் என உறுதியளித்தார். திமுக வடக்கு மாவட்ட செயலாளர் சு.கல்யாண சுந்தரம் மற்றும் திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.