கும்பகோணம் ஆக.20- அரசு போக்குவரத்து ஊழி யர்களின் நீண்ட நாள் கோரிக்கை யான ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை உடனே நடத்த கோரி கோரிக்கை விளக்க வாயிற் கூட்டம் கும்பகோணம் அரசு போக்கு வரத்து தலைமையகம் முன்பு நடை பெற்றது. கூட்டத்திற்கு சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்க தலை வர் பி.முருகன் தலைமை ஏற்றார் சங்க கௌரவத் தலைவர் ஆர்.மனோ கரன் பொதுச்செயலாளர் ஜிமணி மாறன் சம்மேளன துணை தலைவர் ம.கண்ணன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி உரை ஆற்றினார். கூட்டத்தில், 14ஆவது ஊதிய ஒப்பந்த கோரிக்கைகளான வரவு செலவுக்குமான வித்தியாசத் தொகையை சரி செய்து வழங்கிடு 2003 பின் பணியில் சேர்ந்தவர் களுக்கும் பென்ஷன் உறுதி செய்ய வேண்டும் போன்ற 66 கோரிக்கை யை பேச்சுவார்த்தை மூலம் உடனே அமல்படுத்த வேண்டும் என ஊழி யர்கள் முழக்கமிட்டனர். பொரு ளாளர் கேராமமூர்த்தி நன்றியுரை யாற்றினார்.
திருச்சிராப்பள்ளி
திருச்சியில் மண்டல பொது மேலாளர் அலுவலகம் முன் வாயிற்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைத்தலைவர் சீனி வாசன் தலைமை வகித்தார். கூட்டத்தை விளக்கி பொதுச்செய லாளர் சண்முகம், கரூர் மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் பேசினர். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் வாழ்த்துரை வழங்கினர். மத்திய சங்க செய லாளர் அசோகன் நன்றி கூறினார். முன்னதாக 64 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அரசு போக்கு வரத்து கழக திருச்சி மண்டல பொது மேலாளர் ராஜமோகனிடம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் கருணாநிதி தலைமையில் துணைத் தலைவர் சீனிவாசன், சிவக்குமார், முருகேசன், சண்முகம், கே.வி.நட ராஜன், முருகன் ஆகியோர் கொண்ட குழு வழங்கியது.