tamilnadu

img

குளறுபடிகளை நீக்கி அடையாள அட்டை வழங்குக! பட்டுக்கோட்டையில் எல்ஐசி முகவர்கள் தர்ணா

தஞ்சாவூர், செப்.25- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டையில் அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் (லிகாய்) பட்டுக் கோட்டை கிளை சார்பில் பட்டுக் கோட்டை எல்ஐசி அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை தர்ணா போராட் டம் நடைபெற்றது.  இப்போராட்டத்திற்கு கிளை துணைத் தலைவர் அன்பு அருள் தலைமை வகித்தார். கிளைச் செய லாளர் என்.ராமலிங்கம் தொடக்கவுரை யாற்றினார். அலுவலர்கள் சங்கம் டி.அருண் தாமோதரன், ஊழியர்கள் சங்கம் வி.எஸ்.பாலகிருஷ்ணன், ஆர்.விஜயகுமார், வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் பி.வெங்கட்ராமன், ஓய்வு பெற்ற எல்ஐசி ஊழியர்கள் ராஜ்மோகன், சி. திருஞானம் மற்றும் முகவர்கள் கண்டன உரையாற்றினர். மாநில செயல் தலை வர் ஏ.பூவலிங்கம் நிறைவுரையாற்றி னார். கிளைப் பொருளாளர் எம்.பஞ்சாட்சரம் நன்றி கூறினார். இதில் எல்ஐசி முதல் நிலை அலுவலர்கள், ஊழியர்கள், வளர்ச்சி அதிகாரிகள், முகவர்கள் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில், “பாலிசி புதுப் பித்தலில் காலக்கெடு நிர்ணயம் செய்வதைக் கைவிட வேண்டும். பாலிசி கள் மற்றும் தாமத கட்டணத்திற்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதை கைவிட வேண் டும். காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க கூடாது.  குழுக் காப்பீட்டு வயது வரம்பை முகவர் பணிக்காலம் முழுவதும் என நிர்ண யித்து காப்பீட்டு தொகையை ரூ.25 லட்ச மாக உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் அடை யாள அட்டை வழங்க வேண்டும். மெடிக்கிளைம் குளறுபடிகளை நீக்கி முறையாக அடையாள அட்டை வழங்க வேண்டும்.  முகவர்களுக்கு ரூ.18,000 மாத ஊதி யம் வழங்க வேண்டும். பெண் முகவர் களுக்கு சிறப்புச் சலுகை வழங்க வேண்டும். கிராஜூவிட்டி கணக்கீட்டு முறையில் மாற்றம் செய்ய வேண்டும். பேச்சுவார்த்தையில் எல்ஐசி நிர்வாகம் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என வலி யுறுத்தப்பட்டது.