tamilnadu

img

மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக பாலக்காட்டில் எல்ஐசி முகவர்கள் தர்ணா

பாலக்காடு, மார்ச் 3-  ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை (எல்ஐசி)  தகர்க்கும் மத்திய அரசின் முயற்சியை திரும்ப பெற வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள்  பாலக்காடு தலைமை தபால் நிலையம் நோக்கி பேரணி நடத்தி தர்ணாவில் ஈடுபட்ட னர். எல்ஐசி பங்கு விற்பனையை கைவிட்டு  பொதுத்துறையாக தொடர அனுமதிக்க வேண்டும். முகவர்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட முழக்க ங்களை முன்வைத்து பேரணியும் தர்ணாவும் நடந்தது. சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.ஹம்சா பேரணியை துவக்கி வைத்தார். என்.உண்ணி கிருஷ்ணன் தலைமை வகித்தார். சி.சந்திரன், ஆர்.ராஜீவ், கே.என்.ரகுநாத், கே.ஆர்.மோகன்தாஸ், எம்.சி.அசோகன் உள்ளிட்டோர் பேசினர்.