தஞ்சாவூர், ஜூலை 15- பேராவூரணி பகுதியில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு என தனியாக மணல் குவாரி அமைத்து தர வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பேராவூரணி வட்டார சிஐடியு மணல் மாட்டு வண்டித் தொழிலாளர் சங்கம் சார்பில், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமையில், தொழிலாளர்கள், தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த கோரிக்கை மனுவில், “பேராவூரணி தாலுகா ஊமத்தநாடு ஊராட்சி, பெத்தனாட்சிவயல், அம்புலி ஆறு, பட்டுக்கோட்டை தாலுகா குறிச்சி பூங்கா, அக்கினி ஆறு ஆகிய இரு இடங்களில், மாட்டு வண்டி தொழிலாளர்கள் சென்று மணலெ டுத்து பிழைப்பு நடத்த, அனுமதி வழங்க வேண்டும்.
இப்பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாது காக்க வேண்டி பட்டுக்கோட்டை வட்டம் சின்ன ஆவுடையார் கோவில் பகுதியில் தனியாக மணல் குவாரி அமைத்தது போல், இவ்விரு இடங்களிலும், மணல் குவாரி அமைத்து தர வேண்டும். மணல் மாட்டு வண்டித் தொழிலா ளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. அப்போது முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார், பட்டுக்கோட்டை வட்ட மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சக்திவேல் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் உடனிருந்தனர். கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவ டிக்கை எடுப்பதாகவும், தொழிலாளர் வாழ்வா தாரத்தை பாதுகாக்க தன்னால் இயன்ற உத விகளை செய்வதாகவும் உறுதியளித்தார்.