tamilnadu

img

இலவச ரேசன் பொருட்கள்: ஆட்சியரிடம் கோரிக்கை மனு

நாகர்கோவில்,  ஜூலை 24- பொதுமக்களுக்கு ரேஷனில் அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்கிட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் வெள்ளியன்று மனு அளிக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக மக்கள் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டு வேலை இழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் மக்களின் வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளது. எனவே, தற்சம யம் வழங்கி வருகிற அனைத்து ரேஷன் பொருட்க ளையும் வருமான வரி செலுத்தாத குடும்ப அட்டை தாரர்கள் அனைவருக்கும் ஆறு மாதங்களுக்கு விலை யில்லாமல் வழங்கிடவும், ரேசனில் வழங்கப்படுகிற பொருட்களின் அளவு குறை யாமல் தரமான பொருட்க ளாக வழங்குவதையும் உறுதிசெய்ய வேண்டியது அவசியமாகும்.  ஏனெனில், ரேசன் பொ ருட்கள் வினியோகத்தில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாக தமிழக அமைச் சர் நடத்திய ஆய்விலேயே தெரிய வந்துள்ளது. இன்றைய சூழலில் வருமா னம் இல்லாமல் உள்ள மக்களின் வாழ்நிலையை கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் ரேசனில் வழங்கப் படுகிற பொருட்கள் போது மானது அல்ல. எனவே வருகிற அடுத்த ஆறு மாதங்களுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தி யாவசிய பொருட்களை விலையில்லாமல் வழங்கிட வேண்டும் உள்ளிட்டவை மனுவில் கூறப்பட்டிருந்தது. வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் வி.ரெதீஸ், மாநில தலைவர் என்.ரெஜீஸ் குமார், நிர்வாகி காட்சே உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனுவை அளித்தனர்.