தஞ்சாவூர், மே 6- கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து தஞ்சா வூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் கரையூர் தெரு, காந்தி நகர் மற்றும் ஆறு முக கிட்டங்கி தெரு ஆகிய மீனவ கிராமங்க ளின் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், மீனவ குடும்பங்களின் வாழ்வா தாரம் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், அதிராம்பட்டினம் பகுதி யில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் ஏ.ஆர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட வரு வாய் அலுவலர் (பொ) ர.சக்திவேல் ஆகி யோரை கரையூர்தெரு கிராம பஞ்சாயத்தார் கள் சந்தித்து, அதிராம்பட்டினம் நாட்டுப்படகு மீனவர்களை கடலில் சென்று மீன் பிடிக்க அனுமதிக்குமாறும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வெகு தொலைவில் துறைமுகம் அமைந்திருப்பதாகவும் தெரி வித்தனர்.