தஞ்சாவூர், பிப்.11- மாநில அளவிலான இறகுப் பந்துப் போட்டி மதுரை ஜெனித் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் மதுரை டெக்ஃகத்லான் ஸ்போர்ட்ஸ் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 3 ஆம் வகுப்பு மாண வர் அ.ஆத்திப் அகமது, 11 மற்றும் 13 வயதிற்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இரு ஆட்டங்களில் பங்கேற்று முறையே இரண்டாம், மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை மாணவர் அ.ஆத்திப் அகமதுவை, பள்ளித் தலைமை ஆசிரியை எஸ். மாலதி மற்றும் ஆசிரி யர்கள், பெற்றோர்கள் பாராட்டினர். மாணவரின் தந்தை, ஆ.அஜூமுதீன் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண் கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ஆவார்.